ஊழலில் மட்டும் தான் தமிழ்நாடு வெற்றி நடைபோடுகிறது: கனிமொழி எம்பி பேச்சு

ஊழலில் மட்டும் தான் தமிழ்நாடு வெற்றி நடைபோடுகிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.
ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செட்டியார்பட்டி பகுதியில் திமுக வேட்பாளள் தங்கபாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்த கனிமொழி.
ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செட்டியார்பட்டி பகுதியில் திமுக வேட்பாளள் தங்கபாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்த கனிமொழி.

ராஜபாளையம்: ஊழலில் மட்டும் தான் தமிழ்நாடு வெற்றி நடைபோடுகிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செட்டியார்பட்டி பகுதியில் திமுக வேட்பாளரை தங்கபாண்டியனை ஆதரித்து கழக மகளிர் அணி செயலாளர் கனிமொழி வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார். ‌

அப்போது அவர் கூறியதாவது:
ராஜபாளையத்திற்கு தொகுதி மாறி வந்திருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் ஒன்றும் செய்யாமல் இங்கு வந்து நின்று வெற்றி பெற முயற்சி செய்து பார்க்கிறார். இங்கும் அவருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க கூடாது.  அவர் எப்படி எல்லாம் பேச கூடாதோ அந்த அளவுக்கு இறங்கி பேசுகிறார். 

இருந்தாலும் டிரம்ப் வந்தாலும் பயமில்லை,  ஒபாமா வந்தாலும் பயமில்லை எங்களுக்கு மோடி இருக்கிறார். மோடி எங்க டாடி என்று பேசுகிறார்.

ஒன்றில் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள் எந்த அளவுக்கு சொத்து வாங்கி போட வேண்டுமே அந்த அளவிற்கு சொத்து வாங்குவதில் தெளிவாக இருக்கின்றனர்.

வெற்றி நடைபோடும் தமிழகம் என்று கூறுகின்றனர். ஆனால் ஊழலில் மட்டும் தான் தமிழ்நாடு வெற்றி நடைபோடுகிறது.

ராஜேந்திர பாலாஜி மீது பல கோடி ரூபாய்க்கு சொத்து குவித்துள்ளதாக வழக்கு தொடர்கிறது. ஆவின் நிறுவனத்தில் இவர்கள் செய்த  ஊழலால்  மட்டும் ரூ.300 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலை குறைக்கப்படும் என அதிமுகவினர் கூறினர். ஆனால் இவர்கள் ஆட்சி வந்தவுடன் 2 மடங்கு பால் விலை உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு பணியிட மாற்றம் அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது. 

ராஜேந்திர பாலாஜி அடிதடியாக பேசக்கூடியவர் என்று இவருடைய கட்சி எம்எல்ஏ ஒருவர் கூறிகிறார். கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக கூறுகிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் தகவல் தொழில்நுட்பத்தை இவர்கள் கொண்டு வந்ததாக, ஆனால் கடந்த 2000 ஆம் ஆண்டு புதிதாக  தகவல் தொழில் பூங்கா புதிதாக உருவாக்கி தந்தவர் கருணாநிதி. இந்த தகவல் தெரியாமல் ஒரு முதல்வராக இருந்து கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு ஊராகச் சென்று பிரசாரம் செய்யும் முதல்வர் வழியில் யார் கொண்டு வந்தது டைட்டில் பார்க் தொழில் பூங்கா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இதெல்லாம் தெரியாமல் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.  அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காத ஆட்சி,  இந்த ஆட்சி, மக்களைப் பற்றி கவலைப்படாத இவர்கள், வெற்றி நடை போடும் தமிழகம் என்று கூறுகிறார்கள். 

வேலை வாய்ப்பு உருவாக்கித் தரவில்லை, முதியோர் உதவித்தொகை பெற்று தரவில்லை, ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க சென்றால் 10 நாள் அலைந்தாலும் கூட பொருட்கள் கிடைக்கவில்லை, ரேஷன் கடையில் பொருட்கள் தட்டுப்பாடு உள்ளது. உணவுத்துறை அமைச்சரே பொருள்களை வெளியில் விற்பனை செய்யும்போது விற்பனையாளர் விற்பனை செய்ய மாட்டார்களா என்று கேள்வி எழுப்பினார்.

இந்தப் பகுதி நெசவாளர்கள் நிறைந்த பகுதி‌. நெசவாளர்களுக்கு வழங்கக்கூடிய 200 யூனிட் மின்சாரம் திமுக ஆட்சி அமைந்தவுடன் 300 யூனிட்டாக வழங்கப்படும். நூல் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. முன்பு திமுக ஆட்சி இருந்தபோது பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் மத்தியில் ஆளும் அரசு போராடியது. இப்பொழுது இவர்கள் ஆட்சியில் கூடிக்கொண்டே போகிறது இதற்கு என்ன பதில்‌.

திமுக ஆட்சி வந்தவுடன் விவசாய கடன், கல்விக் கடன், கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள 5 சவரனுக்கு உள்பட்ட  நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com