
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருமயம் அருகே வி.கோட்டையூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமதிலகம் மங்களராமன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலை அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக வேட்பாளர் ரகுபதியின் ஆதரவாளர் ராமதிலகம் மங்களராமன் என்பதால் உள்நோக்கத்தோடு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.