திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ள நோட்டுகள் போன்று செல்லாது: ஒ.பன்னீர்செல்வம்

திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு போன்று செல்லாதவை என ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரத்தின் போது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக வேட்பாளர் ஆ.லோகி ராஜனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். 
ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக வேட்பாளர் ஆ.லோகி ராஜனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். 


திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு போன்று செல்லாதவை என ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரத்தின் போது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆ.லோகி ராஜனை ஆதரித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் மக்கள் நலனுக்காக பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியது அதிமுக அரசு தான். கடந்த 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 12 லட்சம் ஏழை எளிய மக்கள் வீடுகள் இன்றி இருப்பது கண்டறிந்து அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆறரை லட்சம் ஏழை எளியோருக்கு காங்கிரட் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குள் மீதம் உள்ள அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதியளிக்கிறேன். திருமணம் செய்யும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி ரூ.25 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரமாகவும், பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.50 ஆயிரம் 60 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசின் தேர்தல் அறிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களுக்கு அந்தத் திட்டங்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் 2006 ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறிய படி இலவசமாக பொதுமக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

தற்போது திமுகவில் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு போன்ற செல்லாதவையே. அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆண்டிபட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குள்ளப்பகவுண்டன்பட்டி அருகே முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கண்மாய் குளங்களை நிரப்பும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com