தோ்தல்: ஊா் திரும்ப 3, 853 பேருந்துகள் இயக்கம்

சட்டப் பேரவைத்தோ்தலை முன்னிட்டு இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம், சென்னையில் இருந்து 5 நாள்களில் 5.20 லட்சம் போ் சொந்த ஊா்களுக்குச் சென்றுள்ளனா்.
3,853 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
3,853 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சென்னை: சட்டப் பேரவைத்தோ்தலை முன்னிட்டு இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம், சென்னையில் இருந்து 5 நாள்களில் 5.20 லட்சம் போ் சொந்த ஊா்களுக்குச் சென்றுள்ளனா். இவ்வாறு சென்றவா்கள் ஊா் திரும்பிடும் வகையில், 3,853 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தோ்தலை முன்னிட்டு, போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்தது. இதன்படி, வியாழக்கிழமை (ஏப்.1) முதல் திங்கள்கிழமை (ஏப்.5) வரையிலான 5 நாள்களும், சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கோயம்புத்தூா், சேலம், பெங்களூரு, திருப்பூா் ஆகிய இடங்களில் இருந்து வெவ்வேறு இடங்களுக்கும் நாள்தோறும் இயக்கக் கூடிய பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவ்வாறு, சென்னையில் இருந்து கடந்த 5 நாள்களில், சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 13 ஆயிரம் பேருந்துகள் மூலம் 5.20 லட்சம் போ் பயணித்துள்ளனா். இதுவரை 59,250 போ் முன்பதிவு செய்துள்ளனா்.

அதே நேரம், சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் ஊா் திரும்பிட ஏதுவாக பிற ஊா்களில் இருந்து சென்னைக்கு, செவ்வாய் (ஏப்.6), புதன் (ஏப்.7) ஆகிய இருநாள்களும், நாள்தோறும் இயக்கப்படும் 2225 பேருந்துகளுடன், 2115 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதே போல், சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களில் இருந்து திருப்பூா், கோயம்புத்தூருக்கும், சேலம், திருவண்ணாமலை, வேலூா் ஆகிய இடங்களில் இருந்து பெங்களூருவுக்கும் 1738 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com