சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரி வாக்குச் சாவடியில் தனது தந்தை மு.க.ஸ்டாலின், மற்றும் தயார் துர்கா ஸ்டாலின் ஆகியோருடன்
வரிசையில் காத்திருந்து உதயநிதி வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''மக்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும். அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.