விவிபேட் செயல்படாததால் காத்திருந்து வாக்களித்த அமைச்சர்  செல்லூர் கே.ராஜு

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு வாக்களித்த போது விவிபேட் இயந்திரம் செயல்படாததால் பரபரப்பு ஏற்பட்டது.
மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி வாக்குச்சாவடியில் காத்திருந்த அமைச்சர் செல்லூர் ராஜு
மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி வாக்குச்சாவடியில் காத்திருந்த அமைச்சர் செல்லூர் ராஜு

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு வாக்களித்த போது விவிபேட் இயந்திரம் செயல்படாததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, மதுரையில் அரசினர் மீனாட்சி மகளிர் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

முன்னதாக அவர் வாக்களித்தபோது யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் விவிபேட் இயந்திரம் செயல்படவில்லை. அதையடுத்து மீண்டும் ஒரு முறை அழுத்துமாறு அறிவுறுத்தப்பட்டார்.  அப்போதும் விவிபேட் இயந்திரம் செயல்படவில்லை. இதையடுத்து அங்கு வந்த தொழில்நுட்ப பணியாளர்கள் விவிபேட் இயந்திரத்தைப் பார்வையிட்டனர். அப்போதுதான் விவிபேட் இயந்திரத்திற்கான வயர் இணைப்பு கழன்று இருப்பது  தெரிய வந்தது.

அமைச்சர் வாக்களிப்பதைப் படம் எடுக்க வந்த புகைப்படக்காரர்கள் தொலைக்காட்சி விடியோ ஒளிப்பதிவாளர்கள் நெருக்கமாக நின்று கொண்டிருந்தபோது வயர் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. அதன் பிறகு சரி இணைப்பு சரிசெய்யப்பட்டு அமைச்சர் வாக்களித்தார். அதுவரை வாக்குச்சாவடியில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

அதேபோல அமைச்சரை எதிர்த்து மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சின்னம்மாள், ஞான ஒளிவுபுரம் பிரிட்டோ பள்ளி வாக்குச்சாவடியில் முதல்நபராக வாக்களித்தார். ஆனால், 11 வாக்குகள் பதிவானதாக கட்டுப்பாட்டுப் பிரிவில் காண்பித்தது. அதன் பிறகு பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு வேட்பாளர் சின்னம்மாள் மீண்டும் வாக்களித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com