புதுச்சேரியில் 100% கரோனா கட்டுப்பாடுகள் அமல்: துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக 100 சதவீத கட்டுப்பாடு என்ற வகையில் 100 இடத்தில் கரோனா பரிசோதனை, தடுப்பூசி போடவுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்)
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read


புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக 100 சதவீத கட்டுப்பாடு என்ற வகையில் 100 இடத்தில் கரோனா பரிசோதனை, தடுப்பூசி போடவுள்ளது.

புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும். அணியவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

திரையரங்குகளில் 50 இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. பொது நிகழ்ச்சிகள் கோவில் விழாக்கள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் குறைந்த அளவில் என்ணிக்கையிலானவர்கள் பங்கேற்க வேண்டும்.

கோயில்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்கப்படும். தினசரி இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கரோனா கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும்.
பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது.

பேருந்துகளில் இடைவெளி விட்டு அமரவேண்டும். பயணிகள் நின்று செல்ல அனுமதிக்கப்படாது. நாளை முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
கரோனா பரவலை 100% விரட்டியடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com