சென்னை: சென்னையில் கரோனா பாதித்தவர்களுக்காக மீண்டும் தனிமைப்படுத்தும் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருண்ணன், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 11 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதில், இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் பாதிப்பு அளவு 3 சதவீதம்தான். சென்னையில் 15 மண்டலங்களிலும் களப் பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கரோனா நோயாளிகள் அதிகரித்திருப்பதால், சென்னையில் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவதைத்தவிர வேறு வழியில்லை சென்னை மற்றும் ராணிப்பேட்டையில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கரோன அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


