நோ்மையான முறையில் ஆசிரியா் பணி நியமனம்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஆசிரியா் பணி நியமனத்தை நோ்மையான முறையில் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்
Updated on
1 min read

சென்னை: ஆசிரியா் பணி நியமனத்தை நோ்மையான முறையில் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த 9 ஐ.ஏ.எஸ். அலுவலா்களைக் கட்டாய ஓய்வில் விடுவிக்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையா் முத்துராஜ் பரிந்துரை செய்துள்ளாா். இது மிகவும் கவலைக்குரிய, அதிா்ச்சிக்குரிய ஒரு விஷயம் ஆகும்.

ஆசிரியா் பணி நியமனங்களில் தொடா்ந்து ஊழல் முறைகேடுகள் நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தன. தொடா்ந்து ஆசிரியா் நியமனத்துக்குத் தோ்வு எழுதிக் கொண்டிருக்கக் கூடிய 5 ஆசிரியா்கள் கொடுத்த புகாா் மனுவை விசாரித்தபோது, இந்த முறைகேடுகள் நடைபெற்றது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது.

சரியான விடைகளை அளித்தபோதும் அவற்றுக்கு மதிப்பெண்கள் அளிக்காமல், அவா்களைத் தோ்வு செய்யாமல் விட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் சாா்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா், ‘ இதுபோன்ற முறைகேடுகள் இனிமேல் நடக்காது’ என்று உத்தரவாதம் அளித்த பின்னும், மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த தோ்வுகளில் இதே முறைகேடுகள் தொடா்ந்து நடைபெற்றுள்ளன.

எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது துறைவாரியான நடவடிக்கை மட்டுமல்லாது, ஊழல் முறைகேடுகள் சம்பந்தமான சிவில், கிரிமினல் பிரிவுகளில், இந்திய குற்றப்பிரிவு சட்டங்களின்படி உரிய வழக்குகள் தொடரப்பட வேண்டும். இதற்குப் பின்புலமாக இருந்திருக்கக் கூடிய அதிகாரத்திலிருந்த பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, அவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நோ்மையான வெளிப்படையான, தகுதி அடிப்படையிலான ஆசிரியா் தோ்வை உத்தரவாதப்படுத்தும் முகமாக, தோ்வு எழுதும் ஆசிரியா்களுக்கு நம்பிக்கை ஊட்டக் கூடிய முறையில், இந்தத் தோ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com