
மதுரை: மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாக்கப்படும் அறைக்கு அருகிலேயே ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதிக்கக்கூடாது என திமுகவினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையம் கீழக்குயில்குடி அண்ணா பல்கலைகழக மண்டல மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலை கழக மண்டல மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சோழவந்தான் தொகுதிக் குரிய இயந்திரங்கள் உள்ள அறைக்கு அருகிலேயே ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதாக கூறி மடி கணினியுடன் ஆசிரியர்கள் வந்துள்ளனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.வெங்கடேசன் தலைமையில் திமுகவினர் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனர்.