நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம்

சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடல் இன்று சனிக்கிழமை மாலை தகனம் செய்யப்படுகிறது.
சாலிகிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடல்.
சாலிகிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடல்.
Updated on
1 min read


சென்னை: சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடல் இன்று சனிக்கிழமை மாலை தகனம் செய்யப்படுகிறது.

மாரடைப்பால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்(59) உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சின்ன கலைவாணர் விவேக் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

விவேக் காலமானார் என்ற செய்தி அறிந்து  திரையுலகினரும், ரசிகர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், சின்ன கலைவாணர் விவேக் உடல் இன்று சனிக்கிழமை மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com