
நடிகர் அதர்வாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே உறுதி செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் அறியப்பட்டதை அடுத்து கரோனா தொற்று பரிசோதனை செய்துகொண்டேன்.
சோதனையின் முடிவில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன்.
விரைவில் குணமடைந்து தனது பணிகளை தொடருவேன் என்று நம்புகிறேன் என்று அதர்வா கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.