கரோனா: தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை

கரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழக தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன் நாளை (ஏப். 20) ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழக தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன் (கோப்புப்படம்)
தமிழக தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன் (கோப்புப்படம்)

கரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழக தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன் நாளை (ஏப். 20) ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மதங்களைச் சேர்ந்த குருமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதில், வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழிபாட்டு தலங்களுக்கு ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்று தெரிகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாளை (ஏப். 20) முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமலாகிறது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com