வேடந்தாங்கல் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

கரோனா தொற்று பரவலை அடுத்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
வேடந்தாங்கல் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
Published on
Updated on
1 min read

மதுராந்தகம்: கரோனா தொற்று பரவலை அடுத்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய ஏரியாக வேடந்தாங்கல் ஏரி திகழ்கிறது. இந்த பறவைகள் சரணாலயம் கடந்த 1858ல் தொடங்கப்பட்டது. சுமாா் 75 ஏக்கா் பரப்பளவு கொண்டது வேடந்தாங்கல் ஏரி. இதன் நடுவே உள்ள கருவேல, கடம்ப மரங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து வருகின்றன.

கரோனா நோய் தொற்றுக் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 17-ஆம் முதல் மூடப்பட்டு, நிகழாண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

சீசன் காலமான தற்போது திங்கள் கிழமை மாலை நிலவரத்தின்படி, 45,000 பறவைகள் உள்ளது.

இந்நிலையில் கரோனா பரவல் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை முதல் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com