

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.26 முதல் கரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
அதன்படி, பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
எனினும், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை. தனியாகச் செயல்படுகின்ற மளிகை உள்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.