ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னிமலையில் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொது மக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர், கிருமிநாசினி ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சென்னிமலையில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னிமலை வடக்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட வெள்ளோடு, கருக்கங்காட்டு வலசு ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசங்களை சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் தெற்கு மாவட்டச் செயலாளரும் ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான சு.முத்துச்சாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னிமலை வடக்கு ஒன்றிய துனைசெயலாளர் முருகேசன், சென்னிமலை ஊராட்சிமன்ற தலைவர் காயத்திரி இளங்கோவன், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி! விக்ரம் - 63 பட அறிவிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


