

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் எதிர்ப்பாளர்கள் இறந்தவர்களின் புகைப்படத்துடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் ஆலை எதிர்ப்பாளர்கள் 50க்கு மேற்பட்டவர்கள் இருந்தவர்களின் புகைப்படத்துடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கக்கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.