மக்கள் நலன்காக்கும் மாற்றங்களுக்கு போராட மே நாளில் உறுதியேற்போம்: கே.பாலகிருஷ்ணன்

மக்கள் நலன்காக்கும் மாற்றங்களுக்கு போராட மே தின நன்னாளில் உறுதியேற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் கே.பாலகிருஷ்ணன் தனது மே தின வாழ்த்தில் தெரிவித்துள்ளார். 
மக்கள் நலன்காக்கும் மாற்றங்களுக்கு போராட மே  நாளில் உறுதியேற்போம்: கே.பாலகிருஷ்ணன்

மக்கள் நலன்காக்கும் மாற்றங்களுக்கு போராட மே தின நன்னாளில் உறுதியேற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் கே.பாலகிருஷ்ணன் தனது மே தின வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், அனைவருக்கும் உலகத் தொழிலாளர்களின் உரிமை தினமான மே தின நல்வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொழிலாளர் வர்க்கம் புதிய உரிமைகளை பெறுவதற்காக மட்டுமல்ல, ஏற்கனவே போராடிப் பெற்ற உரிமைகளையும், சலுகைகளையும் பாதுகாப்பதற்கும் மிகப்பெரிய, நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியதன் தேவையை இந்த ஆண்டு மே தினம் உணர்த்தியிருக்கிறது.
தமிழகத்தில், சட்டமன்றத்தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி இத்தேர்தலில் படுதோல்வி அடைவது திண்ணம் என்கிற முறையில் கருத்துக்கணிப்புகள் வந்துகொண்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ளதைப்போலவே கரோனா தொற்றால் தமிழக மக்களும் விழிபிதுங்கி உள்ளனர். தொற்று பரவலும், மரணங்களும் மக்களை பீதியடையச் செய்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிருக்குப் ஆபத்தானவர்களைக்கூட சேர்க்க வாய்ப்பில்லை. தடுப்பூசிக்கும் கரோனா மருந்துக்கும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளுக்கும் மக்கள் படும் அவதி சொல்லி மாளாது.
மறுபக்கம் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் சிறுவியாபாரிகள், சுற்றுலா பகுதிகளில் உள்ள மக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள், திரையரங்க  உரிமையாளர்கள் அதன் ஊழியர்கள், முடிதிருத்துவோர் போன்ற சாதாரண ஏழை எளிய மக்கள் வாழ்வதாரங்கள் பாதித்து பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கட்டுப்பாடுகளை அறிவித்துக்கொண்டுள்ள அரசு மக்களுக்கு நிவாரணங்கள் குறித்த அறிவிப்பை ஏதும் செய்யவில்லை. பசி பட்டினியோடு கொரனோ தொற்றை எதிர்த்துப்போராடும் நிலைக்கு சாதாரண மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் விவசாயம், தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. சமூக ஒடுக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதி வெறி  படுகொலைகள் தொடர்கின்றன.
சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. பொருளாதார சீரழிவால், முதலில் பாதிப்புக்குள்ளாவது பெண் தொழிலாளர்கள்தான். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அதிகரித்து வருகிறது.  
கரோனா தொற்றிலிருந்து மக்களை காப்போம், சாதி மதவெறி சக்திகளை முறியடிப்போம், அனைத்து உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காகவும், நல்வாழ்விற்கான திட்டங்களுக்காகவும் போராடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com