மேக்கேதாட்டு அணை விவகாரம்: பாஜகவின் போராட்டம் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் - சி.பி.ராதாகிருஷ்ணன்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ள போராட்டம் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் என்று முன்னாள் எம்.பி.யும், கேரளம் மாநில பாஜக பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் 
திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் முன்னாள் எம்.பி.யும், கேரள மாநில பாஜக பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன்.
திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் முன்னாள் எம்.பி.யும், கேரள மாநில பாஜக பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன்.

திருப்பூர்: மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ள போராட்டம் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் என்று முன்னாள் எம்.பி.யும், கேரளம் மாநில பாஜக பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், பங்கேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எந்தவித சலசலப்புக்கு இடம் கொடுக்காமல் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி உரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்.  மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டுவரவில்லை. ஆனால், மத்தியில் உள்ள பாஜக அரசு கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரியைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் ஏழை, எளிய மக்கள் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார்.

மத்திய அரசு ஒருபோதும் அரசியல் லாப நோக்கத்திற்காக ஒரு மாநிலத்தின் உரிமையை பறித்து இன்னொரு மாநிலத்திற்கு கொடுக்காது. மேக்கேதாட்டு அணை வருவதற்கு வாய்ப்பே இல்லை என பாராளுமன்றத்தில் தெரிவித்து இருந்தும் கூட திமுகவினர் இங்கு கூக்குரலிட்டு வருகின்றனர். 

காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் மேக்கேதாட்டு அணை திட்டம் வகுத்த போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த அணை விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ள போராட்டம் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வைப் வெளிப்படுத்தும் வகையில் அமையும். காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் பிரதமர் மோடியால் மட்டுமே சாத்தியமாகும். 

தென்னகத்தில் உள்ள நதிகள் இணைக்கப்படும் போது தமிழகத்தின் ஒட்டுமொத்த நீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். இதற்காக மத்திய அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறது. திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். இந்த சந்திப்பின்போது, பாஜக திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் முன்னாள் எம்.பி.யும், கேரள மாநில பாஜக பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com