கும்மிடிப்பூண்டி அருகே ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் கரோனா விழிப்புணர்வு: அமைச்சர் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு நிகழ்வில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்றார்.
கும்மிடிப்பூண்டி அருகே ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் கரோனா விழிப்புணர்வு: அமைச்சர் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு நிகழ்வில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று பொதுமக்களுக்கு கரோனா தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழக முதல்வரின் உத்தரவின்படி கரோனா விழிப்புணர்வு வார விழாவை ஒட்டி கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கரோனா விழிப்புணர்வு நிகழ்வு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், வட்டார சாலை போக்குவரத்து அலுவலர் கிரிராஜன், முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர்,  வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், வட்டாட்சியர் ந.மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், சாலை போக்குவரத்து அலுவலக நேர்முக உதவியாளர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முன்னிலை வகித்தனர். 

தொடர்ந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் முன்னிலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று பொதுமக்களுக்கு கரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணித்தவர்கள், லாரி ஓட்டுனர்கள் ஆகியோருக்கு,  கபசுர குடிநீர், அமுக்ரா சூரணம் வழங்கினார்.

மேலும் நிகழ்வை ஒட் டி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டிய அமைச்சர் சா.மு.நாசர், கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தினார்.

நிகழ்வில் பேசிய அமைச்சர் சா.மு.நாசர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் துரித நடவடிக்கையால் கரோனா தொற்றின் இரண்டாவது அலை குறுகிய கால அளவில் தடுக்கப்பட்ட நிலையில், 3வது அலையை வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் முதல்வரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றதோடு, தமிழகத்தில் தடுப்பூசிகள் அதிக அளவு போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 3வது அலையால் குழந்தைகள் பாதிக்கப்படாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி,  ஒன்றிய நிர்வாகிகள் திருமலை, பாஸ்கரன், திமுக நிர்வாகிகள் ரமேஷ், ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com