பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்த தலைவர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம்

தமிழ்நாட்டில் பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள தமிழ் சான்றோர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்த தலைவர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம்
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள தமிழ் சான்றோர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள தமிழ் சான்றோர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் உள்ள தமிழ் சான்றோர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாடப்புத்தகத்தில், சுவாமிநாத ஐயரின் ‘பண்டைய காலத்து பள்ளிகூடங்கள்’ என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது. அவர் உ.வே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பெயர்,  ஐயர் நீக்கப்பட்டு சாமிநாதர் என அச்சிடப்பட்டுள்ளது. உ.வே.சா. ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் என மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பது ராமலிங்கம் என மாற்றப்பட்டுள்ளது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்பது வேதநாயகம் என பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பாடநூள் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டும் நூல்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com