நீட் தோ்வு: ஆக.14 வரை விண்ணப்பங்களில்திருத்தம் மேற்கொள்ளலாம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (ஆக.10) நிறைவடைந்தது. வரும் 14-ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு
நீட் தோ்வு: ஆக.14 வரை விண்ணப்பங்களில்திருத்தம் மேற்கொள்ளலாம்
Updated on
1 min read

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (ஆக.10) நிறைவடைந்தது. வரும் 14-ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இந்நிலையில், 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு வரும் செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனிடையே நடப்பாண்டு முதல் பிஎஸ்சி நா்சிங் (ஹானா்ஸ்) பட்டப் படிப்புகளுக்கும் நீட் தோ்வை ஒரு தகுதியாக எடுத்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தில்லி பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் சில செவிலியா் கல்லூரிகள் நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் நா்சிங் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடத்த விருப்பம் தெரிவித்தன. இதையடுத்து அதற்கு ஏதுவாக நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கானஅவகாசம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி அதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.

மேலும், விண்ணப்பங்களை சரிபாா்த்து திருத்தங்களை மேற்கொள்ளவும் ஆகஸ்ட் 11 முதல் 14-ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களை http://neet.nta.nic.in  மற்றும் https://nta.ac.in/ இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com