செப். 1ல் பள்ளிகள் திறப்பு; சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்கத் திட்டம்: அன்பில் மகேஷ் பேட்டி

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசினார். 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய அவர், 

கரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். 

அதன்படி பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டு பள்ளிகளைத் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com