சிறந்த பேரூராட்சியான கல்லக்குடி; சாத்தியமானது எப்படி?

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குப்பைக் கிடங்கை வளமீட்பு பூங்காவாக மாற்றியமைத்து, மண் புழு உரம், இயற்கை உரம் போன்றவற்றைத் தயாரித்து விற்பதன் மூலம் வருவாயைப் பெருக்கியுள்ள கல்லக்குடி பேரூராட்சியை
உரங்களை விற்கும் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது. (இடமிருந்து 2 ஆவது)
உரங்களை விற்கும் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது. (இடமிருந்து 2 ஆவது)
Updated on
2 min read


லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குப்பைக் கிடங்கை வளமீட்பு பூங்காவாக மாற்றியமைத்து, மண் புழு உரம், இயற்கை உரம் போன்றவற்றைத் தயாரித்து விற்பதன் மூலம் வருவாயைப் பெருக்கியுள்ள கல்லக்குடி பேரூராட்சியை தமிழகத்தில் சிறந்த பேரூராட்சியாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தப் பேரூராட்சிப் பகுதி உணவகங்கள், வணிக நிறுவனங்கள், மற்றும் பொதுமக்களிடமிருந்து பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களால் தினசரி  பெறப்படும் குப்பைகளை அதே பகுதியில் சுமார் 1.30 ஏக்கர் இடத்தில் மலை போலக் கொட்டி வைக்கின்றனர். 
இவற்றை மக்கும், மக்கா குப்பை என தரம் பிரித்து,  மக்கும் குப்பைகளிலிருந்து மண்புழு உரம், இயற்கை உரம், மீன் கழிவுகளிலிருந்து மீன் அமிலம், முட்டை ஓடுகளிலிருந்து கல்ரோஸ் உரம் போன்றவற்றைத் தயாரித்து பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் விற்கின்றனர். மேலும், மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் போன்றவற்றை அருகிலுள்ள சிமெண்ட் ஆலைகளுக்கும் விற்கின்றனர்.  
இதனால் குப்பைகள் சேமிக்கும் இடத்தின் அளவு குறுகியதால்,  பிற இடங்களில்  மூலிகைச் செடிகளான ஓமவள்ளி, கருந்துளசி, நொச்சி, ஆடாதுளை,  முடக்கத்தான் போன்றவற்றை வளர்க்கின்றனர். 
இங்கு தயாரிக்கும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி தென்னை, கொய்யா, நாவல் மரம் மற்றும் காய்கறித் தோட்டங்கள் அமைத்து அதிலிருந்தும் வருவாய் பெறுகின்றனர்.
இக் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி, வாத்து, முயல், புறா, மீன்  போன்றவற்றின் கழிவுகளும் உரங்கள் தயாரிக்கப் பயன்படுவதுடன், மாடுகளின் கழிவுகளிலிருந்து இயற்கை வாயுவும் தயாரிக்கப்படுகிறது. இது குப்பைக் கிடங்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேநீர் தயாரிக்க உதவுகிறது. 
இதுமட்டுமல்லாது இந்தக் குப்பைக் கிடங்கில் நான்கில் ஒரு பகுதி இடத்தில் குப்பைக் கிடங்கும் பிற இடங்களில் மண் புழு உரம் உள்ளிட்ட உரங்கள் தயாரிக்கும் இடமாகவும், பிற இடங்களில் பசுமைத் தோட்டம் அமைத்து அதில் அப்பகுதி மக்கள் நடைப்பயிற்சி செல்லும் வகையிலும் அமைத்து வளமீட்பு பூங்காவாக மாற்றியுள்ளனர் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமையிலான  பணியாளர்கள். 
இது மட்டுமல்லாது பேரூராட்சிப் பகுதியில் பொது சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் விநியோகம், வறுமை ஒழிப்பு, நிதி மேலாண்மை போன்ற பணிகளையும் சிறப்பாக செய்துள்ளனர் பேரூராட்சி நிர்வாகத்தினர். 
இந்தப் பணிகளை ஆய்வு செய்த திருச்சி மண்டலப் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர், அதன் ஆய்வறிக்கையை சென்னை பேரூராட்சி இயக்குநருக்கு அனுப்பியதன் மூலம் தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளில் கல்லக்குடி சிறந்த பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டு அதற்கான விருது, ரொக்கப் பரிசாக ரூ. 10 லட்சம் வரும் ஆக. 15- ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
பணியாளர்கள், மக்கள் ஒத்துழைப்பே காரணம்: இதுகுறித்து கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல்அமீது கூறுகையில், பேரூராட்சியின்  அனைத்துப் பணியாளர்களும் மக்களுக்குச் சிறப்பான பணியாற்றினர். இதற்கு காரணம் பேரூராட்சி நிர்வாகம் அவர்களை பல்வேறு வகைகளில் ஊக்கப்படுத்தியதே.  மேலும் பொதுமக்களும்  பேரூராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர் என்றார் அவர்.கல்லக்குடி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் தயாரிக்கப்பட்ட இயற்கை 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com