சுதந்திர தினம்: 15 காவல்துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. 
சுதந்திர தினம்: 15 காவல்துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகச் செயல்பட்டுச் சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2021-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச்சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படும்:
1. அமரேஷ் புஜாரி, ஐஏஎஸ், கூடுதல் காவல்துறை இயக்குநர், தொழில்நுட்பச் சேவைகள், சென்னை
2. அ.அமல்ராஜ், ஐஏஎஸ், கூடுதல் காவல்துறை இயக்குநர், செயலாக்கம், சென்னை
3. சு.விமலா, காவல் துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு, சென்னைப் பெருநகரக் காவல்.
4. ந. நாவுக்கரசன், காவல் ஆய்வாளர், கோட்டைப் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு, திருச்சி மாநகரம்
5. பா.பிரேம் பிரசாத், தலைமை காவலர் 27845, மத்திய குற்றப்பிரிவு, சென்னைப் பெருநகரக் காவல்

இதே போன்று, புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும், கீழ்க்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள் 2021-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:
1. வெ.செல்வி, காவல் ஆய்வாளர், திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையம், புதுக்கோட்டை மாவட்டம்
2. க.சாந்தி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, கன்னியாகுமரி
3. எஸ்.ரவி, காவல் ஆய்வாளர், கொமாரபாளையம் காவல் நிலையம், திருச்செங்கோடு உட்கோட்டம், நாமக்கல் மாவட்டம்
4. க.சாயிலெட்சுமி, காவல் ஆய்வாளர், நேசமணி நகர் வட்டம், கன்னியாகுமரி மாவட்டம்
5. ஆ. அமுதா, காவல் ஆய்வாளர், சத்திரக்குடி காவல் நிலையம், ராமநாதபுரம்
6. வே.சந்தானலட்சுமி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, திண்டுக்கல்
7. சு.சீனிவாசன், காவல் ஆய்வாளர், திருநாவலூர் காவல் நிலையம், கள்ளக்குறிச்சி மாவட்டம்
8. மு.கனகசபாபதி, காவல் ஆய்வாளர், பி2 ஆர்.எஸ்.புரம் சட்டம் மற்றும் ஒழுங்குக் காவல் நிலையம், கோவை மாநகரம்
9. க.ஆடிவேல், காவல் ஆய்வாளர், தென்காசி காவல் நிலையம், தென்காசி மாவட்டம்
10. ப.ஆனந்தலட்சுமி, காவல் உதவி ஆய்வாளர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சேலம் மாவட்டம்
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், தமிழக முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்". இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com