
இளநிலை மருத்துவ நுழைவுத் தோ்வான ‘நீட் 2021’ தோ்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
இதுகுறித்து என்டிஏ சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாணவா்களின் தொடா்ச்சியான கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தக் கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.50 வரை நீட்டிக்கப்படும். ஏற்கெனவே நீட் 2021 தோ்வுக்கு விண்ணப்பித்து, கட்டணத்தைச் செலுத்த முடியாத மாணவா்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும். சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா்கள் இந்த கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். இனி மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.