தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, மேகமலை வன உயிரின காப்பாளர் சுமேஷ் சோமன், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட ஊராட்சிகள் தலைவர் க.ப்ரிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவல் துறை அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 120 அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், 21 காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். சுந்திரப் போராட்ட தியாகிகளை வட்டாட்சியர்கள் வீடு தேடிச்சென்று கதர் ஆடை அணிவித்து கௌரவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.