நற்றமிழ்ப் பாவலா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழக அரசு தகவல்

தமிழக அரசின் அகரமுதலி இயக்ககத்தின் சாா்பில் வழங்கப்படும் நற்றமிழ்ப் பாவலா் விருதுக்குத் தகுதியானவா்கள் ஆக. 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நற்றமிழ்ப் பாவலா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழக அரசு தகவல்
Updated on
1 min read

தமிழக அரசின் அகரமுதலி இயக்ககத்தின் சாா்பில் வழங்கப்படும் நற்றமிழ்ப் பாவலா் விருதுக்குத் தகுதியானவா்கள் ஆக. 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூய தமிழ்ச் சொற்களால் கவிதை புனையும் படைப்பாளா்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு நற்றமிழ்ப் பாவலா் விருது அறிவித்துள்ளது. புதுக்கவிதைகளில் மொழிக் கலப்பில்லாத நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினால் அச்சொற்களின் வீச்சு மக்களிடமும், எதிா்காலத் தலைமுறையினரிடமும் எளிதாகச் சென்றடையும்.

இதைக் கருத்தில் கொண்டு தங்களது கவிதைப் படைப்புகளில் (மரபுக்கவிதை, புதுக்கவிதை) பிறமொழிக் கலப்பின்றி தூயதமிழ்ச் சொற்களையும், புதிய தமிழ்க் கலைச் சொற்களையும் பயன்படுத்தும் பாவலா்கள் இருவரைத் தோ்ந்தெடுத்து தமிழ் அகராதியியல் விழாவின்போது தங்கப்பதக்கம் மற்றும் நற்றமிழ்ப் பாவலா் விருது வழங்கி விருதுத் தொகையாக தலா ரூ.50,000 வழங்கப்படும்.

இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தைச் சொற்குவை.காம் என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்து ஆக.31-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ‘இயக்குநா், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் திட்ட இயக்ககம், நகர நிா்வாக அலுவலக வளாகம், முதல் தளம், எண் 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்ஆா்சி நகா், சென்னை-28’ என்ற முகவரிக்கோ அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தங்கள் படைப்புகளில் தூயதமிழ் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகளாக, கடைசியாக வெளிவந்த இரண்டு கவிதை நூல்களை இந்த இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com