தமிழகத்தின் நிதி நிலையை செப்பனிட இரண்டு மாதங்கள் தேவை: ப. சிதம்பரம் பேட்டி

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராஜீவ் காந்தி சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினார் ப. சிதம்பரம்.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டிகாரைக்குடியில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய ப. சிதம்பரம்.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டிகாரைக்குடியில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய ப. சிதம்பரம்.


காரைக்குடி: தமிழகத்தின் நிதி நிலையை செப்பனிட இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதமப்ரம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராஜீவ் காந்தி சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினார் ப. சிதம்பரம்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து நான் ஏற்கனவே கருத்து வெளியிட்டிருக்கிறேன்.

தமிழக அரசு வெளியிட்ட  வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் நிதி நிலைமை எந்த அளவுக்கு சீர் கெட்டிருக்கிறது என்பதை நிதியமைச்சரும், அரசும் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். அதனை .

ஒவ்வொரு ஆண்டும் உறுதியான நடவடிக்கைகளைப் படிபடியாக எடுத்து 5 ஆண்டுகளில் செப்பனிட செய்ய முடியும். அதன் முதற்படியாகத்தான் இந்த நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நான் இரண்டு கருத்துக்களை வலியுறுத்தி சொல்லியிருக்கிறேன். அதில் ஒன்று தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் படிப்படியாக தான் நிறைவேற்றுவோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லி வருகிறார். அதனடிப்படையில் இந்த நிதிநிலை அறிக்கையில் சில வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பது.

அடுத்தது திமுக சமுதாயப் பார்வை, சமுதாய நோக்கோடு இந்த நிதி நிலை அறிக்கையில் அழுத்தமாக பதிந்திருக்கிறது என்பது. 

ஆக இந்த இரண்டையும் நான் எனது சுட்டுரை பதிவில் தெரிவித்ததையே மீண்டும் இங்கே குறிப்பிடுகிறேன் என்றார்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டபேரவை உறுப்பினர் எஸ். மாங்குடி, காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com