திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

வஜ்ரமலையை மீட்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: அச்சிறுப்பாக்கத்தில் மலைப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்றி வஜ்ரமலையை மீட்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் வினோத்கண்ணா தலைமை வகித்தார். இதில் பா.ஜ.கவின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி நிர்வாகி நடராஜன் சிறப்புரை வழங்கினார். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சிறுப்பாக்கம் மலைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்றி வஜ்ரமலையை மீட்கவும், கிறிஸ்துவ ஆக்கிரமப்புகளை அகற்றுதல் மற்றும் மதமாற்றம் செய்வதை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சதீஷ், பரிமளா மற்றும் பா.ஜ.க, இந்து முன்னணி, விஸ்வஹிந்த் பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com