
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்து வருகிறது.
அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை காலை சுமார் 6.15 மணி முதல் மிதமான மழையாகவும், கனமழையாகவும் மாறி மாறி பெய்து வருகிறது. இம்மழையால் நகரின் முக்கியச்சாலைகளில் மழைநீா் பெருகி ஓடியது.
தற்போது 8 மணியையும் தாண்டியும் பெய்தமழையால், சுற்றுவட்ட கிராமத்து பொதுமக்களும், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் கடந்த இரு தினங்களாக கடும்வெயிலுடன், வறண்ட வானிலையே காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.