கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் 2003 ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவர்களின் சார்பில் பள்ளி வளாகத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. 
கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
Published on
Updated on
1 min read

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் 2003 ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவர்களின் சார்பில் பள்ளி வளாகத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஞாயிறன்று திறந்து வைத்தார்.

கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்விற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவத் தலைவர் கே.எல்.கே.சீனிவாசப் பெருமாள் தலைமை தாங்கினார். பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் இரா.ரமேஷ், செயலாளரும் பள்ளி தலைமை ஆசிரியருமான மீர்அலி, பொருளாளர் அறிவழகன், துணை தலைவர்கள் எஸ்.ரமேஷ், எச்.எம்.டி.மனோகரன், இணைச் செயலாளர் கு.சண்முகம், துணைச் செயலாளர்கள் ஜோ.கிளமெண்ட், மு.க.சேகர் முன்னிலை வகித்தனர். கவிஞர் ரவி வரவேற்றார்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து பேசும்போது, தமிழகத்தின் கடைசி எல்லையான கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை வைத்ததுபோல, தமிழகத்தின் முதல் எல்லையான கும்மிடிப்பூண்டியில் இந்த பள்ளியில் 2003ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சிலை வைத்தது பாராட்டுக்குரியது என்றார்.

நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், பாஸ்கரன், திருமலை , எஸ்.ரமேஷ்,  பரத்குமார், பரதன், முன்னாள் பேரூராட்சி தலைவர் டி.கே.மாரிமுத்து, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் 2003 ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் குழு நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com