அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் திங்கள்கிழமை பிற்பகலில் பெய்த மழை.
அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் திங்கள்கிழமை பிற்பகலில் பெய்த மழை.

அருப்புக்கோட்டையில் பலத்தமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை பிற்பகலில் கனமழை பெய்தது. இதனால்  பொதுமக்கள்  மற்றும்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Published on



அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை பிற்பகலில் கனமழை பெய்தது. இதனால்  பொதுமக்கள்  மற்றும்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் சுமார் 1.50 மணி முதல்  சுமார் அரை மணி நேரம் தொடர்ந்து கன மழை பெய்தது.

பலத்த இடி, மின்னலுடனும், காற்றுடனும் பெய்த இம்மழையால் வீதிகளில் மழை நீர் பெருகி ஓடியது. நகரின்  பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

கடந்த சனிக்கிழமை பெய்த கனமழையை அடுத்து திங்களன்றும் கனமழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com