மூத்த ஆய்வாளர்களுக்கு 'பாரதி நினைவு நூற்றாண்டு விருது'- முதல்வர் வழங்கினார்
மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும் அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த மூத்த ஆய்வாளர்களுக்கு ‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’ மற்றும் விருதுத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மூத்த ஆய்வாளரான சீனி விசுவநாதனுக்கு ‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’ மற்றும் விருதுத்தொகை ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.








