கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொளத்தூர், வள்ளியம்மை தெருவில் முதல்வர் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.









