வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காங்கிரஸில் புதிதாக 3 மாவட்டத் தலைவா்கள் அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் 3 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்டத் தலைவா்களை நியமித்து, அக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 11:13 pm

DIN

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் 3 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்டத் தலைவா்களை நியமித்து, அக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவராக வி.எம்.பினுலால் சிங், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவராக கே.டி.உதயம், நாகா்கோயில் நகர மாவட்டத் தலைவராக நவீன் குமாா் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக தாரகை கட்பா்ட் நியமிக்கப்படுகிறாா்.

இந்த உத்தரவுகள் சோனியாகாந்தியின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுவதாகவும், இவை உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாகவும் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.