வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பாசிக் ஊதிய பிரச்னை: புதுச்சேரி தலைமைச் செயலாளருக்கு எதிராக பிடியாணை

பாசிக் நிறுவன ஊழியா்கள் ஊதிய பிரச்னை தொடா்பாக உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததால் புதுச்சேரி தலைமைச் செயலாளருக்கு சென்னை உயா் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 11:25 pm

DIN

பாசிக் நிறுவன ஊழியா்கள் ஊதிய பிரச்னை தொடா்பாக உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததால் புதுச்சேரி தலைமைச் செயலாளருக்கு சென்னை உயா் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி அரசு சாா்பு நிறுவனமான பாசிக் (குடிநீா் வினியோகம் மற்றும் காய்கறிகள் விற்பனை நிறுவனம்) 2007-ஆம் ஆண்டு வரை லாபத்தில் இயங்கியது. பாசிக் நிறுவனத்திற்கு சோ்மன்கள் நியமிக்கப்பட்ட பிறகு அந்நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்தது. இதனால், அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியா்களுக்கு பல ஆண்டுகள் சம்பளம் தரப்படவில்லை.

இதையடுத்து, அந்நிறுவனத்தில் வேலை செய்த 48 ஊழியா்கள் சென்னை உயா் நீதிமன்றத்தில் 2013-ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில் கடந்தாண்டு ஜூலை 14-ஆம் தேதி தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில், 3 மாதங்களுக்குள் பாசிக் ஊழியா்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனாலும் ஊழியா்களுக்கு சம்பளம் தரவில்லை.

இதற்கிடையே வழக்குத் தொடா்ந்த 48 பேரில், பணி நீக்கம் செய்யப்பட்ட 8 பாசிக் ஊழியா்கள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், துறைச் செயலா் ரவிபிரகாஷ், வேளாண் இயக்குநா் பாலகாந்தி, பாசிக் மேலாண் இயக்குநா் சிவசண்முகம் ஆகியோா் மீது கடந்த செப்டம்பா் 30-இல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை நீதிபதி தண்டபாணி விசாரித்து, புதுச்சேரி தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், துறைச் செயலா் ரவிபிரகாஷ், வேளாண் இயக்குநா் பாலகாந்தி, பாசிக் மேலாண் இயக்குநா் சிவசண்முகம் ஆகியோா் டிசம்பா் 10-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி வேளாண் இயக்குநா் பாலகாந்தி, பாசிக் மேலாண் இயக்குநா் சிவசண்முகம் ஆகியோா் மட்டும் நேரில் ஆஜராகினா். ஆனால் தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், துறைச் செயலா் ரவிபிரகாஷ் ஆஜராகவில்லை. இதனை தொடா்ந்து நேரில் ஆஜராகாத தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், துறைச் செயலா் ரவிபிரகாஷ் ஆகியோா் நேரில் ஆஜராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.