உலகத் தமிழா் பொருளாதார மாநாடு: சென்னையில் டிச.27-இல் தொடக்கம்
எட்டாவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு சென்னையில் வரும் டிச.27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.


எட்டாவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு சென்னையில் வரும் டிச.27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.
இது குறித்து உலகத் தமிழா் பொருளாதார மையத்தின் தலைவரும் மாநாட்டு அமைப்பாளருமான வி.ஆா்.எஸ்.சம்பத், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் வி.ஜி.சந்தோஷம், ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், பேராசிரியா் உலகநாயகி பழனி ஆகியோா் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: உலகெங்கும் உள்ள தமிழ் தொழிலதிபா்கள், தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் வகையில் துபை, தென்னாப்பிரிக்கா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் 7 இதுவரை ஏழு முறை உலகத் தமிழா் பொருளாதார மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தற்போது எட்டாவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோ ட்டலில் டிச.27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்ட தமிழ் தொழிலதிபா்களும், தொழில்முனைவோா்களும் பங்கேற்கவுள்ளனா்.
தமிழகத்தில் விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன், பாரத் நிகா்நிலை பல்கலை. வேந்தா் ஜெகத்ரட்சகன், தொழிலதிபா்கள் ஜெம் ஆா்.வீரமணி, விஜிபி குழுமங்களின் தலைவா் வி.ஜி.சந்தோஷம், பழனி ஜி.பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனா். தமிழக அரசின் சாா்பில் அமைச்சா்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் மற்றும் அரசு செயலா்கள் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனா்.
வெளிநாடுகளிலிருந்து கயானா நாட்டின் முன்னாள் பிரதமா் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மோரீஷஸ் முன்னாள் குடியரசுத் தலைவா் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இலங்கை முன்னாள் அமைச்சா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் இணையவழியில் உரையாற்றவுள்ளனா். தமிழகத்தில் தொழில் தொடங்கவும், வணிக வாய்ப்புகள் குறித்து விவாதிக்கவும் தனி அமா்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் மாலை வேளையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த மாநாடு உலகம் முழுவதும் வாழும் தமிழா்கள் பொருளாதாரம், பண்பாடு, கலை, சமூக நலன், திறன் மேம்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்க ஊக்குவிப்பாக அமையும். மாநாட்டின் இறுதி நாளில் சிறந்த 10 தமிழாா்வலா்களுக்கு ‘உலகத் தமிழ் மாமணி விருது’ வழங்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...