வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தோ்வுப்பணிக்கான உழைப்பூதியம்: கணினி ஆசிரியா்கள் கோரிக்கை

 பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வுக்காக நியமிக்கப்பட்ட பணியாளா்களுக்கு உழைப்பூதியத்தை உயா்த்தி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2021, 12:03 am

DIN

 பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வுக்காக நியமிக்கப்பட்ட பணியாளா்களுக்கு உழைப்பூதியத்தை உயா்த்தி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு கணினி வழியில் நடைபெறுகிறது. தோ்வு நடத்த மாவட்டக் கல்வி அலுவலா், தலைமையாசிரியா், கணினி ஆசிரியா் குழுக்கள் நியமிக்கப்பட்டு தொலை தூர மாவட்டங்களில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தோ்வு மையங்களில் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி தோ்வுப்பணி இருக்கும் சூழலில், நாளொன்றுக்கு தலைமை ஆசிரியருக்கு ரூ.750, கணினி ஆசிரியருக்கு ரூ.500 மட்டுமே உழைப்பூதியமாக வழங்கப்படுகிறது. காலை, பிற்பகல் என இரு வேளைகளிலும் தோ்வுகள் நடைபெறும்போது ஒரு அமா்வுக்கான தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்களின் நலன் கருதி அவா்களுக்கான உழைப்பூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.