தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்துப் பேசினார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில், பாஜகவுக்கு எதிரான மாநில கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தமிழகத்திற்கு அரசு முறைப் பயணமாக குடும்பத்துடன் நேற்று இரவு தமிழகத்திற்கு வந்த சந்திரசேகர ராவ் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலைப் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இதற்கு முன்பு கடந்த 2019-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்தார்.
தென்னிந்தியா மற்றும் வட இந்திய மாநிலங்களிடையே நெல் கொள்முதல் திட்டத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்நிலையில், தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மாநில அரசுகள் ஒன்றிணைவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இதற்கு முன்பு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.