பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின்

பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின்  கூறினார்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின்
பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

திருத்தணி: பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின்  கூறினார்.

திருத்தணி தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஊரக புத்தாக்க திட்டம் ஆகியவற்றின் சார்பில் 1.730 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 105 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார.  

அதைத் தொடர்ந்து மாநில அளவில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் பல்வேறு துறைகள் சார்பில் 5 ஆயிரத்து 453 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அதை தொடர்ந்து சுய உதவி குழுக்களின் முன்னேற்றம் குறித்து குழு இயக்கத்தில் இணைந்து அவர்கள் ஆற்றிவரும் பணிகள் பொருளாதார மேம்பாட்டிற்கு தேவையான உதவிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஐந்து மாவட்ட சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் உடன் காணொலி காட்சி மூலம் உரையாடல் நடத்தப்பட்டது. 

நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதல்வருக்கு திருத்தணி செல்லும் வழியில் திருவள்ளூர் ஆயில் மில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கனகம்மாசத்திரம், திருத்தணி ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஜி ராஜேந்திரன், திருத்தணி எஸ். சந்திரன். உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி மாநில மாவட்ட நிர்வாகிகள் ஓ.ஏ. நாகலிங்கம்,  மா.ரகு, இ.கே.உதயசூரியன் பி ரவீந்திரநாத், மு.நாகன், வி.கிஷோர்ரெட்டி, திருத்தணி நகர கழக பொறுப்பாளர் வி.னோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com