
மதுரை: பள்ளிக்கூட கட்டடங்கள் புதுப்பித்து கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் இருக்கும் 372 பள்ளிக்கூட கட்டடங்கள் கண்டறியப்பட்டு, உடனடியாக அதை புதுப்பித்துக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான அரசாணையை விரைவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார்.
மேலும் வரும் ஜனவரியில் மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வார் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.