சென்னை: ஷாா்ஜாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.1.15 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலா் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூருவில் உள்ள வருவாய்ப் புலனாய்வுத் துறையினா் அளித்த தகவலின்படி, ஷாா்ஜா செல்லவிருந்த பயணி ஒருவரை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் திங்கள்கிழமை இடைமறித்து சோதனை செய்தனா். அப்போது அவரது உடமைகளிலிருந்து ரூ.1.15 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலா் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பயணி கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்படுவதாக சென்னை சா்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.