நீடாமங்கலம்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஞானபுரீ 33 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலில் 5 நாள் ருத்ர ஜெபம், ஹோமம், லட்சார்ச்சனை வியாழக்கிழமை பூர்த்தியடைந்தது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் கிராமத்தில் ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானத்தின் ஞானபுரீ சித்திரகூட சேத்திரம் ஸ்ரீ மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் ஆஞ்சநேயருக்கு வலதுபுறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், இடதுபுறம் ஸ்ரீ கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், பவ்ய ஆஞ்சநேயர் சுவாமிகள் எழுந்தருளியுள்ளனர்.
இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.
இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கி, மங்களம் உண்டாகும். இத்தகைய சிறப்புமிக்க இக் கோயிலில் சங்கடஹர ஸ்ரீ மங்கல மாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு மார்கழி மாத அமாவாசை மூல நட்சத்திரம் கூடிய ஜனவரி 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி மகோத்சவம் நடைபெற உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கலாம்| நான்கு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகும் கரோனா பாதிப்பு
அனுமன் ஜெயந்தி மகோற்சவத்தை முன்னிட்டு கடந்த 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வியாழக்கிழமை வரை 5 நாள் ஆஞ்சநேயருக்கு ருத்ரஜெபம், ஹோமம், லட்சார்ச்சனை நடைபெற்றது. இதன் பூர்த்திவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஜனவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு பழ அலங்காரம் நடைபெறவுள்ளது. வரும் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் கோயிலில் வைத்து பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் பக்தர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
விழா ஏற்பாடுகளை கோயில் தர்ம அதிகாரி ரமணி அண்ணா, ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரர் ஆகியோர் தலைமையில் கோயில் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.
இதற்கு விண்ணப்பிக்கலாம்| ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.