தருமபுரியில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி மறியல்: 150 பேர் கைது

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரியில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.
தருமபுரியில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். சுருளிநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.சேகர், மாநில துணைத் தலைவர் பழனியம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இந்த போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்த குற்றக் குறிப்பானை மற்றும் வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 

கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம், தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com