
சங்ககிரி: 32வது சாலைப் பாதுகாப்பு வார விழாவினையொட்டி சங்ககிரி நெடுஞ்சாலை, காவல், வட்டார போக்குவரத்து துறைகளின் சார்பில் சாலையில் வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு பேரணி சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் மு.அமிர்தலிங்கம் விழிப்புணர்வு பேரணிக்கு தலைமை வகித்து கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பின்னர் சங்ககிரி உள்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பி.ரமேஷ் பேசியது:-
சாலையில் வாகனத்தை ஓட்டுபவர்கள் சாலை விதிமுறைகளை மதிக்க வேண்டும், சாலையில் செல்லும் போது மிதமான வேகத்தில் செல்ல வேண்டும், சாலை வளைவுகளில் வாகனத்துடன் நிற்பதை தவிர்க்க வேண்டும், வளைவுகளில் வாகனங்களை முந்தி செல்லக்கூடாது, பேருந்து நிறுத்தங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும், சாலைகளில் உள்ள போக்குவரத்து சமிக்ஞைகளை கவனித்து வாகனத்தை இயக்க வேண்டும், மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது, இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே அமர்ந்து செல்ல வேண்டும், இரு சக்கர வாகனத்தில் கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும், செல்லிடபேசியை பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கக்கூடாது என்றார்.
சங்ககிரி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் எம்.பி.மலர்விழி முன்னிலை வகித்தார். சங்ககிரி வட்டாட்சியர் எஸ்.விஜி, நெடுஞ்சாலைத்துறை எஸ்.கவிதா, மோட்டார் வாகன ஆய்வாளர் கே.கோகிலா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் தினகரன், கோட்டை அரிமா சங்கத்தலைவர் சக்திவேல், செயலர் ரமேஷ், அரிமா சங்கத்தலைவர் வெங்கடாஜலம், செயலர் ஏ.எஸ்.டி.கார்த்திக், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கப்பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.