சசிகலா தமிழகம் வருகை: அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

பெங்களூருவில் இருந்து சசிகலா, நாளை திங்கள்கிழமை (பிப். 8) சென்னைக்கு வரவுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
சசிகலா
சசிகலா

பெங்களூருவில் இருந்து சசிகலா, நாளை திங்கள்கிழமை (பிப். 8) சென்னைக்கு வரவுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா, நாளை திங்கள்கிழமை சென்னைக்கு வருகிறாா். பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் சசிகலாவுக்கு எல்லையில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் அதிக எண்ணிக்கையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களின் குடியிருப்புகள் உள்ள் கிரீன்வேஸ் சாலை பகுதியில் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் ராஜமாதாவே வருக என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 

ஓய்வுக்குப்பின் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் சசிகலா, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவாா். பின்னர் அதிமுக தலைமை அலுவலகம் செல்லலாம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம், நினைவு இல்லத்திலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 

வேதா இல்லம், பின்னி சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com