கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம்: கனிமொழி

திமுக ஆட்சி அமைந்தால் மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

News image
மதுரையில் பிரசாரம் மேற்கொண்ட கனிமொழி
Updated On :9 பிப்ரவரி 2021, 7:20 am

DIN

திமுக ஆட்சி அமைந்தால் மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற பிரசார பயணத்தை மதுரையில் கனிமொழி மேற்கொண்டிருக்கிறார். இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மதுரை வடக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் பயணம் மேற்கொண்டார். செல்லூர் கண்மாயைப் பார்வையிட்ட அவர் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செல்லூர் கண்மாய் தூர்வாரும் பணி முறையாக செய்யப்படவில்லை எனப் புகார் தெரிவித்தனர்.

பின்னர், செல்லூர் 50 அடி சாலையில் உள்ள மண்டபத்தில் நெசவாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார். .அப்போது அவர் பேசியது, 

Story image

கட்டுமான தொழிலாளர்களுக்கு அதிமுக அரசு நிவாரண நிதியை முறையாக வழங்கவில்லை பதிவு செய்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியை அரசு வழங்க மறுத்துவிட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படும். மத்திய அரசு எதைச் செய்தாலும் அதற்கு தலையசைக்கும் அரசாக அதிமுக அரசு இருந்துவருகிறது. 

இங்கிருக்கும் அமைச்சர்களும் செயல்படாத நிலையிலேயே இருந்து வருகின்றனர். இதனால் மக்களுக்கான உரிமைகள் பறி போய்க்கொண்டிருக்கின்றன. அதுபோலவே மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநில உரிமைகள் மீட்கப்படும். அதோடு மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதைத்தொடர்ந்து செல்லூர் பகுதியில் உள்ள கைத்தறி நெசவு இடத்தை பார்வையிட்டார். 

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது, 

குடிமராமத்து திட்டத்திற்கு அதிமுக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்தது உண்மைதான். ஆனால் அந்த நிதி ஆளுங்கட்சியினரின் வருமானத்தில் வழி சேர்க்கவே ஒதுக்கப்பட்டது. எங்கும் தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. தற்போது மக்களிடையே மாற்றம் வர வேண்டும் என்ற மனநிலை உருவாகியுள்ளது. குறிப்பாக பெண்களிடையே அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு மீண்டும் திமுக ஆட்சி மலர வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கி இருக்கிறது. 

Story image

மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அரசு அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர்கள் கூறுகிறார்களே எனக் கேட்கிறீர்கள், ஆனால் தலைவர் திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது அவரது நினைவிடத்துக்கு இடம் கொடுக்க எத்தகைய நிலையை அதிமுக அரசு மேற்கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார் திமுக நிர்வாகிகள் என் முத்துராமலிங்கம் வவேலுசாமி முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.