ஆவடி: நகைக் கடன் நிறுவனத்தில் தங்க நகைக்கு பதில் போலி நகைகளை வைத்த மூவர் கைது

சென்னையை அடுத்த ஆவடியில் இயங்கி வரும் நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனத்தில் தங்க நகைகளைத் திருடி போலி நகைகளை வைத்த
ஆவடி: நகைக் கடன் நிறுவனத்தில் தங்க நகைக்கு பதில் போலி நகைகளை வைத்த மூவர் கைது
ஆவடி: நகைக் கடன் நிறுவனத்தில் தங்க நகைக்கு பதில் போலி நகைகளை வைத்த மூவர் கைது
Published on
Updated on
1 min read

சென்னையை அடுத்த ஆவடியில் இயங்கி வரும் நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனத்தில் தங்க நகைகளைத் திருடி போலி நகைகளை வைத்த ஊழியர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 28.5 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, ஆவடியில் உள்ள நகைக் கடன் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் ஜெயகர் என்பவர் கடந்த 03.02.2021 அன்று தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் சதீஷ்குமார் என்பவரிடம் 986.25 கிராம் எடையுள்ள தங்க நகைகளை தனி தனியாக பார்சல் செய்து கொடுத்து, தி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கும் படி அனுப்பியுள்ளார். 

தங்க நகைகளை பெற்றுக்கொண்ட சதீஷ்குமார் அதில் 28.5 சவரன் எடையுள்ள தங்க நகை பார்சலை பிரித்து, தங்க நகைகளை எடுத்துக் கொண்டு அதற்கு பதில் போலியான தங்க நகைகளை வைத்து தி.நகர் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

தி.நகரில் உள்ள தங்க நகைக் கடன் நிறுவன ஊழியர்கள் அதை பெங்களூரில் உள்ள நிறுவனத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர். பெங்களூரில் ஊழியர்கள் தங்க நகைகளை சரிபார்த்த போது, ஆவடி கிளையிலிருந்து வந்த பார்சலில் இருந்த 28.5 சவரன் தங்க நகைகள் போலியானது என்பது தெரியவந்துள்ளது. 

இது குறித்து மேலாளர் ஜெயகரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே ஜெயகர் இது குறித்து T-6 ஆவடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

T-6 ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சதீஷ்குமார், அவரது  தோழி ஷோபா, நண்பர்  ரஞ்சித் (எ) கண்ணன் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 28.5 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் தங்க நகைகளை திருடி தனக்கு அறிமுகமான ஷோபா என்பவரிடம் கொடுத்துள்ளார். ஷோபா தனது நண்பர் ரஞ்சித் (எ) கண்ணனிடம் கொடுத்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com