

ஈரோடு: பட்டப்பகலில் இரண்டு ரவுடிகளை கொலை செய்த வழக்கில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கலை என்கிற கலைச்செல்வன். இவரது நண்பர் கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த குணா என்கின்ற குணசேகரன். 2018 இல் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய கலை, குணா இருவரையும் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பட்டப்பகலில் வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பகுதியில் வைத்து வீச்சரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்துவிட்டு கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் வழக்கு தொடர்பாக நடிகர் விஐய் ரசிகர் மன்ற நிர்வாகி கார்த்தி, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த வேட்டையன் ரவி, அழகிரி மற்றும் மதன் உள்ளிட்ட 4 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.